சேலம், நவ.29: சேலம் கிச்சிப்பாளையம் ஏடிசி டெப்போ பகுதியை சேர்ந்தவர் போண்டா கார்த்தி(28). கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் ரவுடி பட்டியலில் இருக்கிறார். கிச்சிப்பாளையத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அதே போல மணக்காடு மேற்கு விநாயகர் கோவில் தெருவில் இன்னொரு மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் அஸ்தம்பட்டி போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று மரவனேரி பகுதியில் வந்து கொண்டிருந்த ரவுடி போண்டா கார்த்தியை அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் தவமணி, பிடித்து சோதனை செய்தார். அப்போது அவரிடம் 1.250 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அஸ்தம்பட்டியில் கஞ்சாவுடன் ரவுடி கைது
0