தர்மபுரி: அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோயிலில், நாளை (8ம் தேதி) நடைபெறும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் இணைய வழி நேரலையாய் பக்தர்கள் காண வசதி செய்யப்பட்டுள்ளது.அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், நாளை (8ம் தேதி) தேய்பிறை அஸ்டமி பெருவிழா நடக்கிறது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு கோ பூஜை மற்றும் அசுவ பூஜை, 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 10 மணிக்கு மேல் 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு செய்யப்படும் சத்ரு சம்ஹார ஹோமம், இரவு 12 மணிக்கு மேல் மகா சக்தி வாய்ந்த குருதிப் பூஜை நடைபெற்று குருதி தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. கோயிலின் அஷ்டமி பெருவிழா https://www.youtube.com/@kalabairavarswamy_dpi/streams என்ற யூ டியூப் சேனலில் நாளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இத்தகவலை காலபைரவர் கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.