அவிநாசி, மே 22 : அவிநாசி வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் நே ற்று முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதில் புலிப்பார் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் புலிப்பார் ஊராட்சி கவுண்டாயிபுதூரில் இருந்து வெங்கமேடு வழியாக புதுச்சந்தை செல்லும் தார் சாலை மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.
இதேபோல கவுண்டாயிபுதூரில் இருந்து தத்தனூர் செல்லும் தார் சாலை முற்றிலும் தார் மற்றும் கற்கள் பெயர்ந்து சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி அவதியடைந்தனர். இதையடுத்து சேதமடைந்த பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், விஜயகுமார் (ஊராட்சிகள்) ஆகியோர் பார்வையிட்டு, உடனடியாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.