அவிநாசி ஆக.22: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் பாபி சர்புதார் (25). இவர் அவிநாசி மங்கலம் ரோட்டில் கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே அவர் தங்கி இருந்தார். இந்நிலையில் 3 மர்ம ஆசாமிகள் அறைக்கதவை முகத்தை துணியால் கட்டிக் கொண்டு தட்டி உள்ளனர்.
அவர் கதவை திறக்காததால் அந்த ஆசாமிகள் சிமெண்டு சீட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து பாபி சர்தார் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின்பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.