அவிநாசி,மே26: அவிநாசியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர் சேர்க்கை குறித்து கல்லுாரியில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை பெற்றோர்கள் அணுகி, 8 இளம் நிலை பாடப் பிரிவுகள் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (பொருளாதாரம்), பி.காம்., பி.காம்., (சர்வதேச வணிகவியல்), பி.காம்., (வணிக நிர்வாகவியல்) பி.எஸ்.சி., (வேதியியல்), பி.எஸ்.சி., (கணினிஅறிவியல்), பி.சி.ஏ., (கணினி பயன்பாட்டியல்) உள்ளிட்ட 8 இளம் நிலை பாடப்பிரிவுகள் உள்ளது. வரும் மே. 27ம் தேதியன்று முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க இறுதிநாள் என கல்லுாரி முதல்வர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.