அவிநாசி, ஜூலை 7: அவிநாசி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒளிரும் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.சாலை பாதுகாப்பின் ஒரு அங்கமாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை அருகே ஒளிரும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் அதற்கு வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.அவிநாசி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் உள்ள அனைத்து சாலைகளில் உள்ள ஒளிரும் வேகத்தடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என என உதவிக்கோட்டப் பொறியாளர் செங்குட்டுவன் மற்றும் உதவிப்பொறியாளர் தரணிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.