அவிநாசி, மே 19: திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் ஏழை பொதுமக்கள் பயன்படும் விதமாக அவிநாசி அரசு மருத்துவமனையில் தனியார் அறக்கட்டளை மற்றும் தனியார் ரத்ததான அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை அவிநாசி நகராட்சி மன்ற கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் நடராசன், ரவி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, மோதிலால், கிரண், ரபீக், அன்பரசன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாம் பணிகளை ஏற்பாடு செய்தனர். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
அவிநாசியில் ரத்ததான முகாம்
0