மொடக்குறிச்சி,மே31: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 28 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.204.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.214.39க்கும், சராசரி விலையாக ரூ.214.29க்கும் விற்பனையானது.
இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.145.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.193.99க்கும், சராசரி விலையாக ரூ.176.69க்கு ஏலம் போனது. மொத்தமாக 749 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 166க்கு விற்பனை நடைபெற்றது.