நாமக்கல், மே 20: கோயில் விழாவில் தகராறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். குமாரபாளையம் தாலுகா ஆனங்கூர் அருகே, நெட்டவேலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நெட்டவேலாம்பாளையம், மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில் வாழை மர தோரணங்கள், இளநீர் குலைகளை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெட்டி சேதப்படுத்திவிட்டார். கடந்த 15ம் தேதி கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணை கேலி கிண்டல் செய்துள்ளார். வாட்ஸ் அப் மூலம் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வரும் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவதூறு பரப்பும் வாலிபர் மீது நடவடிக்கை
0
previous post