கோவை, ஜூன் 20: மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு தரப்பினருக்கு இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பயணிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளிடம் அழைப்பிதழ்களை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். இதேபோல பல்வேறு பகுதிகளிலும் அவ்வமைப்பினர் அழைப்பிதழ்களை வழங்கி மாநாட்டிற்கு அழைத்தனர்.