அறந்தாங்கி, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்குள்ள விஸ்வரூப அஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை உகந்த நாளாகும். இந்நிலையில் நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு துளசி, வடை மலர்களால் மாலை அணிவித்து மகா தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
45
previous post