காரைக்குடி, பிப். 26: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிர் மருத்துவ அறிவியல் துறை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத் தலைவர் இலங்கேஸ்வரன் வரவேற்றார். பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சி.சேகர் கருத்தரங்கை துவக்கி வைத்தார். கேஎம்சி மருத்துவமனை துணை நிறுவனர் காமாட்சி சந்திரன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், `புற்றுநோய் என்பது ஒரு செல்லில் இருந்து பல செல்களாக வளர்ச்சி அடையும். அது தன்னை சார்ந்துள்ள உறுப்பை பாதித்துவிடும். புற்றுநோயை குணப்படுத்த தற்போது பல்வேறு நவீன முறை சிகிச்சைகள் கையாளப்பட்டு வருகிறது என்றார். அடையாறு புற்றுநோய் நிறுவன மூலக்கூறு புற்றுநோயியல் துறைத் தலைவர் சபிதா ராமநாதன், பதிவாளர் செந்தில்ராஜன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ராஜாராம் ஆகியோர் கருத்தரங்கு நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.