காலாப்பட்டு, நவ. 27: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இது அலை சறுக்கு வீரர்களுக்கு சாதகமான சூழல் என்பதால் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான தந்திராயன்குப்பம் கடற்கரையில் ஏராளமான வெளிநாட்டினர் அலைசறுக்கு விளையாடி பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் வழக்கத்தை விட அலை சறுக்கு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டதால் அலை சறுக்கு பயிற்சி பெறுபவர்கள் தடையின்றி பயிற்சி பெற்றனர்.