ராயக்கோட்ைட, நவ.29: ராயக்கோட்டை அருகே, சஜ்ஜலப்பட்டி மேட்டேரியை சேர்ந்தவர் நாகராஜ் (44). கூலிதொழிலாளி. இவர மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 25ம் தேதி மாலை தக்காளி மண்டிக்கு வேலைக்கு செல்வதாக நாகராஜ் மனைவியிடம், கூறிவிட்டு சென்றுள்ளார். மண்டி பக்க் வந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது பெங்களூரிலிருந்து ராயக்கோட்டை நோக்கி வந்த அரசு பஸ் நாகராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனை்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலகு மாவட்ட திட்ட மேலாளர் அருள் செய்திருந்தார். பஸ் மோதி தொழிலாளி பலி
0
previous post