மதுராந்தகம், ஜூன் 11: அச்சிறுப்பாக்கம் அருகே மேய்ச்சலுக்காக சென்றபோது, அறுந்து கிடந்த மின் கம்பிகளை மிதித்த 10 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகின. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் பெரும்பேர்கண்டிகை மற்றும் சிறுபேர்பாண்டி கிராமங்களை சேர்ந்த மாடுகள் நேற்று பகல் வழக்கம் போல் மேச்சலுக்கு சென்றன. அப்போது நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்து மின் வயர்கள் அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளன. அந்த மின் கம்பிகளை மேச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்ததால் மின்சாரம் தாக்கி 10 பசு மாடுகள சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. இதில், உயர் ரக கறவை பசு மாடுகள் 6 உள்ளிட்ட பத்து மாடுகள் இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து மின்சார வாரியம், வருவாய்த் துறையினர், கால்நடைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறுந்து கிடந்த மின் கம்பிகளை மிதித்த 10 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம்
0
previous post