அறந்தாங்கி, ஜூலை 26: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில்ஆடிப்பெருந் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அறந்தாங்கி பகுதிக்கு காவல் தெய்வபமாக இருந்துவரும் வீரமாகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழா ஆடிமாதம் முழுவதும் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் மண்பபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் செய்து வீதி உலா நடைபெறும். நாள்தோறும் மண்டபடிதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.