அறந்தாங்கி,ஆக.21: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி பொழிஞ்சியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா 5 தலைமுறைக்கு பிறகு நடைபெற்றது.அறந்தாங்கி அருகே மறமடக்கி பொழிஞ்சியம்மன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த கோயில். இந்த கோயிலில் கடந்த 5 தலைமுறைக்கு முன் மது எடுப்பு திருவிழா கொண்டாடப்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.அதன்பிறகு தற்போது நேற்று இந்த கோயிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்த ஆயிரகணக்காண பெண்கள் அலங்கரிக்கப்பட்ட மது குடங்களை தலையில் வைத்து பொழிஞ்சியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்று அம்மனை வழிபட்டு சென்றனர். 5 தலைமுறைக்கு பிறகு கொண்டாடப்பட்ட திருவிழா என்பதால் அப்பகுதியில் உள்ள பக்கதர்கள் பொதுமக்கள் மகழிச்சி அடைந்தனர்.மது எடுப்பு திருவிழா ஏற்பாடுகளை மறமடக்கி பொதுமக்கள். அமைச்சர் மெய்யநாதன் ஏற்பாடு செய்து இருந்தனர்.