அறந்தாங்கி:அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் ஆர்ச்சில் பெயர் எழுத வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் கடந்த 1972-ம் ஆண்டு தற்போது திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவராக இருக்கும் ராசன் முயற்சியில் 8 படுக்கை அறை கொண்ட மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.அதன்பிறகு 30 படுக்கை அறை கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மாத்திரை வாங்கவும், சிகிச்சை பெறவும் வந்து செல்கின்றனர்.