அறந்தாங்கி, ஆக. 12: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொன்னைக்காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாய தொழிலாளி. இவரது மனைவி ராதிகா (23). இந்நிலையில் ராதிகா கர்ப்பமுற்று நிறைமாத கர்பிணியாக இருந்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு ராதிகாவிற்க்கு திடீர் என பிரவவலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அறந்தாங்கி 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ராதிகாவை ஏற்றி கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துமனைக்கு வந்துகொண்டிருந்தனர்.
108 ஆம்புலன்ஸ் வாகனம் அரசர்குளம் புதுரோடு என்ற இடத்தில் வரும்போது ராதிகாவுக்கு பிரசவவலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிவந்த பிரகாஷ் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி உள்ளார். வாகனத்தில் இருந்த அவரகால மருத்துவ நுட்புனர் அரிகரன் ராதிகாவுக்கு பிரசவம் பார்த்து உள்ளார். பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாய், சேய் இருவரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.