அறந்தாங்கி, ஆக.28: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பெண்களுக்கு பெட்டகம் வழங்கினார். தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளை, விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களை சென்றடையும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 18ம்தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நாகுடியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நாகுடி, சுப்பிரமணியபுரம், வெட்டிவயல், ஏகப்பெருமாளுர், ஏகணிவயல், அத்தானி, மேல்மங்களம், கீழ்குடி அம்மன் ஜாக்கி ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் பெண்களுக்கு வழங்கி. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நிறைவு பெற்றது என கூறினார். முகாமில் அறந்தாங்கி ஆர்டிஒ சிவக்குமார், தாசில்தார் திருநாவுகரசு, துணை தாசில்தார் வட்டாச்சியர் பாலமுருகன், வட்டா வழங்கல் வட்டாச்சியர் கருப்பையா, வட்டார மருத்துவ அலுவலர் முகமது ஸ்திரிஸ், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முகாமில் அதிகாரிகளின் முன்னிலையில் பொதுமக்களிடம் இருந்து 362 கோரிக்கை மனுக்களை பெற்றப்பட்டது. 38 கோரிக்கை மனுக்களுக்கு முகாமில் உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை அவர்களிடம் வழங்கப்பட்டது.