Monday, March 4, 2024
Home » அறந்தாங்கியில் கார் மோதி விபத்து: 4 பேர் காயம்

அறந்தாங்கியில் கார் மோதி விபத்து: 4 பேர் காயம்

by Dhanush Kumar

அறந்தாங்கி: அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் கார் மோதி 4 பேர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அறந்தாங்கி களப்பக்காட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் காரை ஓட்டி கொண்டு வந்த போது மூக்குடி பிரிவு சாலை அருகே சாலையில் நின்று கொண்டு இருந்த மூக்குடியை சேர்ந்த வீரமணி (65) என்ற மூதாட்டியை காரில் மோதிவிட்டு அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தஆயிங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம், ஆசீர்வாதம்,நவீன் ஆகியோர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தனர்.அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் அடுத்து அடுத்து மோதி சென்ற காரை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் காரை நிறுத்தி காரை ஓட்டி வந்த பிரபாகரனை அறந்தாங்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 4 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

You may also like

Leave a Comment

fourteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi