அரூர், ஜூன் 10: அரூர் திருவிக நகர், பெரியார் நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு ஆகிய பகுதிகளில், உணவு ேதடி குரங்குகள் அடிக்கடி வந்து குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. தொல்லை கொடுக்கும் குரங்குகளை விரட்டினால், கடிக்க வருவதுடன் பொருட்களை தூக்கி கொண்டு சென்று விடுகிறது. மேலும் தனியாக இருக்கும் குழந்தைகளையும், மூதாட்டிகளை குரங்குகள் கடித்துள்ளது. மேலும் கேபிள் லைன், தொலைபேசி ஒயர்களையும் பிடித்து இழுத்து துண்டித்து விடுகிறது. கூட்டமாக வரும் குரங்குள் வீடு, கடைகளில் புகுந்து கையில் கிடைக்கும் திண்பண்டங்களை தூக்கி கொண்டு சென்று விடுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை, வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் நகரில் குரங்குகள் அட்டகாசம்
0