அரூர், செப்.3: அரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் தலைமை வகித்தார். டிஎஸ்பி ஜெகநாதன், தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், வள்ளி மற்றும் வனத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரியம் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விளக்கி கூறப்பட்டது. உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து, அனுமதி பெற்ற பின்னரே விநாயகர் சிலைகளை வைத்து அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்தி கரைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அரூர் ஆர்டிஓ ஆபிசில் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
previous post