அரூர், மே 14: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2028ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்க சேர்க்கை உதவி மையம் இக்கல்லூரி வளாகத்தில் செயல்படுகிறது. இக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ-தமிழ், பி.ஏ-ஆங்கிலம், பி.ஏ-பொருளியல், வணிகவியல், பி.எஸ்சி. தாவரவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் கற்பிக்கப்படும். 2025-2026ம் கல்வியாண்டு முதல் பிஏவரலாறு(ஆ/வ) என்ற பாடப்பிரிவு தமிழக அரசால் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பாடபிரிவிற்கும் சேர்த்து வரும் 27ம் தேதி வரை இணையதளத்தில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.50 மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பம் பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் மங்கையர்கரசி தெரிவித்துள்ளார்.
அரூர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
0