அரூர், ஆக.22: அரூர் பகுதியில் பலா விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பலா சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரூர் பகுதியில் பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. அரூர்- சேலம் ரோட்டில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு மற்றும் இருளப்பட்டி, மஞ்சவாடி கணவாய், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், சாலையோரங்களில் பழங்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். கேரள மாநிலத்திலிருந்து வரத்து குறைந்ததையடுத்து, கொல்லிமலை மற்றும் ஏற்காடு பகுதியிலிருந்து வரத்து அதிகரித்துள்ளது. அளவை பொறுத்து ஒரு பழம் ₹100 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கேரள பலாவை விட கொல்லிமலை, ஏற்காடு பலா மிகுந்த சுவையானது என்பதால், அந்த வழியாக செல்வோர் வாகனங்களை நிறுத்தி பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால், விற்பனை சூடுபிடித்துள்ளது.