பெரம்பலூர்,ஆக.19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையைச் சேர்ந்த கந்தசாமி மகன் மோகன்ராஜ் என்பவரை கடந்த 5ம் தேதியன்று அதே கிராமத்தைச் சேர்ந்த அங்குமுத்து மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் தாக்கி யுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மோகன்ராஜ் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கமுத்தைத் தவிர மற்ற மூன்றுநபர்கள் கைது செய்யப்படவில்லை.
அனைவரையும் கைது செய்யக் கோரியும், அரும்பாவூர் போலீசாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் நேற்று(18ம்தேதி) காலை 11 மணியளவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராஜேந்திரன் தலை மையில், அரும்பாவூர் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில கட்டு ப்பாட்டுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஜெயராமன், சின்னதுரை, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் சமயத்தின் மாவட்ட தலைவர் அமுதா, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகரச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான இந்திய.கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.