அருமனை, மே 29: அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி விஜயகுமாரி (64). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகனுக்கு திருமணமாகி ஜிஞ்சு (30) என்ற மனைவி உள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறுப்படுகிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த ஜிஞ்சு பாத்திரத்தால் விஜயகுமாரியின் தலையில் தாக்கியதுடன் கையில் பலமாக கடித்து வைத்தார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய விஜயகுமாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.