அருமனை, ஆக. 21: அருமனை அருகே அண்டுகோடு ஈந்திக்காலை பாட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (66). இவர் பாதையில் மண் மூட்டைகளை போட்டதாக கூறப்படுகிறது. இதை அதே பகுதியை சேர்ந்த தங்கையன் மகன் ரெஜி (48) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரெஜி கத்தியால் ராமகிருஷ்ணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணன் மகள் புஷ்பபாய் அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.