அருமனை, ஜூன் 17: அருமனை அருகே நெட்டா தாது பகுதியை சேர்ந்தவர் தங்கையன் நாடார் (68). தொழிலாளி. இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கேரள மாநில பகுதியான ஆறாட்டுகுழி செண்பகதரிசு பகுதியில் உள்ள ஓடையில் தங்கையன் நாடார் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆறுகாணி மற்றும் வெள்ளறடை போலீசார் முதியவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் கேரள பகுதி என்பதால் வெள்ளறடை போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தங்கையன் நாடார் அந்த வழியாக நடந்து வந்தபோது ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருமனை அருகே ஓடையில் தவறி விழுந்து முதியவர் பலி போலீசார் விசாரணை
0