அருமனை, நவ.17: அருமனை முதப்பன்கோடு சந்திப்பு பகுதியில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மேல்புறம் வட்டார குழு செயலாளர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். வாகன பிரசாரத்தை சிங்காரன் தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பற்றியும், விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிப்பது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறப்பட்டது. இந்த வாகன பிரசாரம் வட்டவிளை, மேல்புறம், திக்குறிச்சி வழியாக சென்று மாலையில் கழுவன்திட்டை காலனியில் நிறைவடைந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ஜெயராஜ், ஹென்றி, சாரதாபாய் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜிஸ்குமார் நன்றி கூறினார்.
அருமனையில் மார்க்சிஸ்ட் வாகன பிரசாரம்
0