அருப்புக்கோட்டை, ஜூன் 20: அருப்புக்கோட்டையில் வளர்ச்சி பணிகளை நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.297.25 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மேலும் சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டில் ரூ.7 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டும் பணி, ரூ.7 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. நகரில் நடைபெறும் இந்த வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆய்வுசெய்தார். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை தரமானமுறையில் மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், உதவிபொறியாளர் முரளி, பணி மேற்பார்வையாளர் சுமதி, சுகாதார அலுவலர் குமார் ஆகியோர் இருந்தனர்.