அருப்புக்கோட்டை, மே 19: அருப்புக்கோட்டையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை, போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எஸ்ஐ ஜெயகோபி தலைமையில் போலீசார், சொக்கலிங்கபுரம் எம்டிஆர்நகர் பகுதியில் உள்ள வீட்டில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூனிஸ்வரன்(56) என்பவரை போலீசார் கைது செய்து, ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.