அருப்புக்கோட்டை, ஜூன் 27: சர்வதேச போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. விழிப்புணர்வு உறுதி மொழியினை டாக்டர் காமாட்சி பாண்டியன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை மனநல மருத்துவர் டாக்டர் நிஷாந்த் முன்னிலையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் காமாட்சி பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.