அருப்புக்கோட்டை, ஜூன் 7: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி மைதானம் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டு உள்ளது. இதை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் வளர்இளம் பெண்களுக்கு பராமரிப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற சேவைகளும், இந்த மையம் காலை 8 முதல் 12, மாலை 4 முதல் 8 மணி வரை செயல்படும். இங்கு ஒரு டாக்டர், ஒரு செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர் பணியில் இருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் இளங்கோவன், நகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கணேஷ், மருத்துவர் கோமதி, சித்த மருத்துவர் திலகம், நகர்ப்புற நலவாழ்வு மைய மருத்துவர் பொன் ரூபா, நகர்மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, தவமணி, மீனாட்சி, அல்லிராணி, சங்கீதா, இளங்கோ, கண்ணன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.