ஈரோடு, செப்.1: அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொங்கு விடுதலை புலிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொங்கு விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு பெற்று தந்த சமூக நீதி போராளிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில், மேயர் நாகரத்தினம், திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அருந்ததியர் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் 3 சதவீத விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி சட்டப்பூர்வமாக வழங்கிய கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டிப்பது, பட்டியல் சமூக மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.