மார்த்தாண்டம், செப்.2: மார்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் செயல்பட்டு வரும் அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான புதுமையான தொழில்நுட்ப நிரலோட்டம் நடைபெற்றது. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களுக்கு தீர்வுகளை மாணவர்கள் பல்வேறு கோணங்களில் சிந்தித்து தங்கள் யோசனைகளை தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைத்து மென்பொருள் மற்றும் வன்பொருளை முன்மாதிரியாக நிரலோட்ட நிகழ்வில் அறிமுகப்படுத்தினர்.
வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முன்மாதிரிகள் அடுத்தகட்ட சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த முன்மாதிரிகளை உருவாக்கிய மாணவர்களை அருணாச்சலா கல்வி குழுமத்தின் தாளாளர் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளர் சுனி, இயக்குனர்கள் தருண் சுரத் மற்றும் மீனா ஜெனித், கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் ரீனா பெஞ்சமின், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரிய-பேராசிரியைகள் பாராட்டினர்.