அரியலூர், மே 30: அரியலூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கடந்த இரு நாட்களாக கலெக்டர் ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் அரியலூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர், திருமானூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், 2-வது நாளான நேற்று தவுத்தாய்குளம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்.
அப்போது, குளோரின் பயன்படுத்தப்படும் முறைகள், குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரம், குடிநீரின் தரம், நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாட்களின் விவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டாட்சியர் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.