அரியலூர்,செப்.11: அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி, தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் இன்று (11ம்தேதி) நடக்கிறது என நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி தலைவர், துணை தலைவர், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (11ம்தேதி) மாலை 4 மணியளவில் அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார். கூட்டத்தில், ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் பெண்களை அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்த்தல். தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்துவது. குறித்து பேசப்படுகிறது. எனவே மாவட்ட, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட கழக செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.