அரியலூர், நவ. 27: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறையின் சார்பில், தமி ழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்,கும்ப கோணம் மண்டலத்தின் சார்பில் அரியலூர் – சென்னை (கிளாம்பாக்கம்) 2 புதிய புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட கலெக்டர் இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது.
அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் அரியலூர் – சென்னை கிளாம்பாக்கத்திற்கு 2 புதிய புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அதன்படி அரியலூர் – சென்னை கிளாம்பாக்கத்திற்கு குன்னம், வேப்பூர் வழியாகவும் மற்றும் அரியலூர் – சென்னை கிளாம்பாக்கத்திற்கு பெரம்பலூர், குன்னம் வழியாகவும் செல்லும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 2 புறநகரப் பேருந்துகள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி, திமுக நகர செயலாளர் முருகேசன், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன் , திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கருப்புசாமி, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குணா, திமுக மாவட்ட அயலக தலைவர் தங்கை எழில்மாறன் ,
திமுக மாவ ட்ட விளையாட்டு மேம்பட்ட அணி அமைப்பாளர் அருண் ராஜா , திமுக மாவ ட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ராமு ,மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர், நிர்வாக இயக்குநர் (கும்பகோணம்) பொன்முடி , திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொதுமேலாளர் (கூட்டாண்மை தொழில்நுட்பம்) சிங்காரவேலன், துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ரெங்கராஜன், துணை மேலாளர் (வணிகம்-கூட்டாண்மை) இராமநாதன், துணை மேலாளர்கள் சுரேஷ் (வணிகம் திருச்சி மண்டலம்), சுவாமிநாதன் (தொழில்நுட்பம் திருச்சி மண்டலம்), ரவி (பணியாளர் & சட்டம் திருச்சி மண்டலம்) பத்மகுமார் (பணியாளர் & சட்டம் காரைக்குடி மண்டலம்), அனைத்து மண்டல உதவி மேலாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.