ஜெயங்கொண்டம், ஜூன் 5: அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது
அப்போது, மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 17 மனுதாரர்கள் தங்கள் குறைகளை எஸ்பி தீபக் சிவாச்சிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த, காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடனடியாக பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
உங்களை தேடி பல்வேறு காரணங்களினால் நீண்ட நாட்களாக பட்டா மாறுதல் செய்ய முடியாமல் இருப்பது, தனி பட்டாவாக மாறாமல் இருப்பது, முதியோர் உதவித் தொகை பெற முடியாமல் இருப்பது, புதிய தொழில் தொடங்க கடனுதவி, மின் இணைப்பு கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தாலுக்கா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மக்கள் நேரில் சென்று அலைந்து சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகமே மக்களைத் தேடி வந்து குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திடும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.