அரியலூர், ஜூன் 23: அரியலூர் நகராட்சி பெரியார் நகர் 5வது குறுக்குத் தெருவில் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரியலூர் கல்லூரி சாலையில் பெரியார் நகர் 5வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சேகரித்து அதை தெருமுனையில் வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசி செல்லும் குப்பைகளை கால்நடைகள் மேய்வதோடு, துர்நாற்றம் வீசி வருவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், நகராட்சியினர் நாள்தோறும் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை அமைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் பெரியார் நகரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
0
previous post