ஜெயங்கொண்டம், செப்.1: அரியலூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை ஜெயங்கொண்டம் அனைத்தும் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெருமாள் தீயனூர் கிராமம் காலனித் தெருவை சேர்ந்தவர் அரியமுத்து (81) விவசாய கூலி தொழிலாளியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ள தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து முதியவர் அரியமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.