அரியலூர். ஆக. 15: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை உருவாக்கப்படது. இதை தமிகக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைர் ரத்தினசாமி கலந்துகொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் உள்ள அரசு நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலைகளையும் திறந்து வைத்தார்.
கீழக்கொளத்தூர் மரகத பூஞ்சோலையில் பசுமை நுழைவுவாயில், பேவர் பிளாக் நடைபாதை, சிமெண்டினால் அமைக்கப்பட்ட 10 இருக்கைகள் கைப்பந்து மைதானம், உடற்பயிற்சி கம்பி, பனையோலையினால் அமைக்கப்பட்ட பார்வையாளர் கூடம், ராசிவனம் – நட்சத்திரவனம், மூலிகைத்தோட்டம் மற்றும் அனைத்து வகையான உள்ளுர் வகை மரங்கள் நடப்பட்டுள்ளது. எனவே, உள்ளுர் கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடவும், அதன் பயன்களை தெரிந்துகொள்ளும் வகையில் மரகதப் பூஞ்சோலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், திருமானூர் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.சுமதி அசோகசக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி.கீதா, வட்டாட்சியர் திருமதி.முத்துலெட்சுமி, வனசரக அலுவலர்கள் முத்துமணி, சரவணக்குமார, கீழக்கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.செந்தமிழ்செல்வி, வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.