அரியலூர், நவ. 13: அரியலூர் தனியார் மஹாலில், அரியலூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் மற்றும் அரியலூர் நகர திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் சபாபதி மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அரியலூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் மற்றும் அரியலூர் நகரம்உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அந்த அந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் திருத்தப்பட்ட, வாக்காளர்கள் பட்டியலை வழங்கி, அவற்றை சரி பார்த்து வரும் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள்சிறப்பாக கட்சி பணியாற்றி, கட்சிக்கு அதிகளவு வாக்குகள் பெற்று தர வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
இந்நிகழ்வில், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகரன், லதா பாலு, அரியலூர் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், அரியலூர் நகர செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், நகர் மன்ற துணைத்தலைவர் தங்க கலியமூர்த்தி, ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.