அரியலூர், ஆக 23: அரியலூரில் குறுவட்ட வளைப்பந்து போட்டி நடந்தது. அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித் துறை சார்பில் குறுவட்ட அளவிலான வளைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 14,17,19 வயதுக்குட்பட்டவர்களுக்கான நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் விளையாடினர்.
ஊராட்சித் தலைவர் அம்பிகா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா தொடங்க்கிவைத்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னதுரை, உறுப்பினர் பாலாஜி, வார்டு உறுப்பினர்கள் அருள்சாமி, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். முன்னதாக போட்டிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகளையும், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களையும், குறுவட்ட செயலரும் பள்ளி தலைமை ஆசிரியருமான சின்னதுரை வரவேற்றார்.
போட்டி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், ஆய்வக உதவியாளர் மணிகண்டன் மேற்கொண்டனர். போட்டி நடுவர்களாக இளவரசன், வீரபாண்டியன், ஜாக்குலின சுகந்தி, தீபா, கற்பகம் ஆகியோர்செயல்பட்டனர். நிறைவில் துணைச் செயலர் அந்தோணிசாமி நன்றி கூறினார். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாலையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.