அரியலூர், ஆக. 20: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.அரியலூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்த நாளை, அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாடவேண்டும். இந்திய பங்கு சந்தை செபி தலைவரை கண்டித்து, சென்னை சாஸ்திரி பவன் அருகேயுள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு ஆக. 22ம் தேதி நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில மகளிரணி துணைத் தலைவி ரேணுகா தேவி, வட்டார தலைவர்கள் கர்ணன், சக்திவேல், கண்ணன், கங்காதுரை, மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன், மாவட்டச் செயலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகரத் தலைவர் சிவகுமார் வரவேற்றார். நிறைவில் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.