அரியலூர், ஜூன் 23: அரியலூரில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி பிரச்சார இயக்கத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், துரைசாமி, அம்பிகா, பரமசிவம், துரை அருணன், கிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்ட செயலாளர் வேல்முருகன், செந்துறை வட்ட செயலாளர் அர்ஜுனன், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன். திருமானூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். மேலும், இதில், மலர்க்கொடி, பத்மாவதி, சரோஜினி, அருணாச்சலம் உள்ளிட்ட கிளை செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.