அரவக்குறிச்சி, ஜூலை 5: அரவக்குறிச்சியில் வெவ்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரவக்குறிச்சி -புங்கம்பாடி பிரிவு அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த புங்கம்பாடி மேல் பாகம் பகுதியைச் சேர்ந்த ஜெயசித்ரா (40), அரவக்குறிச்சி மார்க்கெட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (52), புங்கம்பாடி பாலம் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த அரவக்குறிச்சி எஸ்.ஆர்.ஓ தெருவை சேர்ந்த சக்திவேல் (47) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மூவரும் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.