அரவக்குறிச்சி, மே 25: அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை, பலத்த காற்று காரணமாக முருங்கைச் செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டதால் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஈசநத்தம், சின்னதாராபுரம், ஆண்டிப்பட்டிக்கோட்டை, வேலம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மிதமான மழையுடன் காற்றும் வீசுவதால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டன. ஒரு சில பூக்கள் மட்டுமே மிஞ்சி உள்ளது. பூக்கள் உதிர்ந்தால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காத என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது மரம் முருங்கை கிலோ 28 ரூபாய்க்கும், செடி முருங்கை கிலோ 40 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை 48 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அவ்வப்போது மழை , காற்றும் வீசியதால் அனைத்து பூக்களும் உதிர்ந்து விட்டது. காற்று சற்று பலமாக வீசத் தொடங்கினால் முருங்கை மரமே ஒடிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பூக்கள் உதிர்ந்து விட்டதால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.