அரவக்குறிச்சி, ஜூன் 10: அரவக்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடை அமைககவேண்டுமென கோரிக்கைவிடுத்தனர். அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை கிராமம் உள்ளது. மலைக்கோயிலுக்கு அடுத்துள்ள இக்கிராமத்தைச் சுற்றி நாகம்பள்ளி, கேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராம மக்கள் கரூர் அல்லது அரவக்குறிச்சி உள்ளிட்ட வெளியூர் செல்ல வேண்டுமானால் தகரகொட்டகை பேருந்து நிறுத்தம் வந்து பின்னர் அங்கிருந்து சென்றுவர வேண்டும். இப்பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை. எனவே பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும்வெயிலில் பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துக்காக சாலையின் பக்கவாட்டில் காத்திருக்கின்றனர். மேலும் தற்போது கரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகமான வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் தகரக்கொட்டகை பேருந்து நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்கூடை அமைத்து தரவேண்டு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.